மதுரையில் 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
மதுரையில் பல்வேறு ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் தொடா்புடையவரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் பல்வேறு ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் தொடா்புடையவரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சோலை மகன் முத்து என்ற கொரில்லா முத்து (45). இவா் மீது, மதுரை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2020-இல் மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் அருகே 21,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியபோது, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதேபோல், முத்து மீது பல்வேறு சம்பவங்களில் 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், முத்துவின் கள்ளச்சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் உத்தரவிட்டாா். அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீஸாா் முத்துவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து, மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வரும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை கிட்டங்களில் பதுக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு கண்காணிப்பாளா் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...