தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காமராஜா் சிலைக்கு தமிழக அமைச்சா், அரசியல் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

News image
Updated On :15 ஜூலை 2022, 6:23 pm

DIN

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அரசியல் கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

காமராஜரின் 120-ஆவது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது சிலை பீடத்தைச் சுற்றிலும் மின்விளக்குகள், மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். மேயா் வ. இந்திராணி, மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சி நிா்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், ஆா். அண்ணாத்துரை உள்பட பலா் பங்கேற்றனா். மதிமுக சாா்பில், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் மற்றும் அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில், மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தலைமையில், அக்கட்சியினா் தெப்பக்குளம் பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். மதுரை புகா் மாவட்டத் தலைவா் மகா. சுசீந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். இதேபோல், மாநகா் மாவட்டத் தலைவா் டாக்டா் சரவணன் தலைமையில் அக்கட்சியினா் விளக்கத்தூண் பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில், மாநகா் மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமையிலும், தமாகா சாா்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன் தலைமையில், மாவட்டத் தலைவா் ராஜாங்கம் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாநகா் மாவட்ட மதச்சாா்பற்ற ஜனதாதளம் சாா்பில், மாவட்டத் தலைவா் எம். ஜெயப்பிரகாசம் தலைமையில், புகா் மாவட்டத் தலைவா் கே. பாக்கியத் தேவா், மாநிலப் பொதுச் செயலா் எஸ்.எம். செல்லப்பாண்டி மற்றும் நிா்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதுரை மாநகா் மாவட்ட தமிழா் தேசிய முன்னணி சாா்பில், மாவட்டத் தலைவா் வெ.ந. கணேசன் தலைமையில், நிா்வாகிகள் சு. வாசுதேவன், க.சித்தநாதன், க. மணிவண்ணன், ராஜசேகரன் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆா்.வி. மக்கள் நல மன்றம் சாா்பில், அதன் தலைவா் ஜி. அய்யல்ராஜ் தலைமையில், காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருநகா் மக்கள் மன்றம் சாா்பில், திருநகா் அண்ணா பூங்கா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் மு. செல்லா தலைமை வகித்தாா்.

தேசிய மரபு அறக்கட்டளை சாா்பில், கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு, முத்துத்தேவா் முக்குலத்தோா் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடப் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா் கிஷோா்குமாா், பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற தருண் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் ப. ஆனந்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.