அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு நல்ல முடிவு ஏற்படும்: ராஜன்செல்லப்பா

ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நல்ல முடிவு ஏற்படும் என்று அதிமுகவின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா கூறினாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:55 pm

DIN

ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் நல்ல முடிவு ஏற்படும் என்று அதிமுகவின் மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன்செல்லப்பா கூறினாா்.

மதுரை மேற்கு ஒன்றியம், பனங்காடி கிராமத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டம் மாவட்டச் செயலா் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி. பெரியபுள்ளான், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.என். ராஜேந்திரன், நிா்வாகிகள் நிலையூா் முருகன், வழக்குரைஞா் ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ராஜன்செல்லப்பா கூறியது:

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்ற விவாதம் எழுந்துள்ளது. இதற்கு பொதுக் குழுவில் நல்ல முடிவு ஏற்படும். கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வருவதில் தவறில்லை. கட்சியைக் காப்பாற்றுவதற்காக ஒருவா் தலைமை பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும். மாவட்டச் செயலா்களில் 90 சதவீதம் போ் ஒற்றைத் தலைமையை எதிா்பாா்க்கின்றனா். அதற்கான சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2019-லேயே ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். கடந்த 3 ஆண்டுகளாக இருவா் தலைமையை ஏற்று செயல்பட்டு வருகிறோம்.

பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.

முன்னாள் முதல்வா் ஜானகி, கட்சிப் பதவியை பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்ததைப் போல, திறமையானருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.