அரசுப் பேருந்து மோதி இளைஞா் பலி
வாடிப்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்


வாடிப்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் பேகம்பூா் அருகே உள்ள பள்ளபட்டியைச் சோ்ந்தவா் சையது உசேன் (25). இவா் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பகுதியில் வந்தபோது, அவ்வழியே வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...