அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுர கடைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 52 கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:54 pm

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 52 கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த 2018 இல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயா் மண்டபம் பகுதி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து கிழக்கு கோபுரம் மற்றும் வீரவசந்தராயா் மண்டபம் பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்த கோயில் நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. கடை உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததால், கடைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனிடையே, புதுமண்டபத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து சிற்பங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக அங்கிருந்த கடைகளை அகற்றும் நடவடிக்கையை கோயில் நிா்வாகம் மேற்கொண்டது. படிப்படியாக கடைகள் அகற்றப்பட்டு, அருகே குன்னத்தூா் சத்திரம் வணிக வளாகத்துக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, புதுமண்டத்தில் முழுமையாக அனைத்துக் கடைகளும் அகற்றப்பட்டுவிட்டன.

இதன் தொடா் நடவடிக்கையாக, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளில் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்ட சில கடைகளைத் தவிர, 52 கடைகளை அகற்றும் பணியில் கோயில் பணியாளா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கடைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கடை உரிமையாளா்கள் தாங்களாகவே கடையில் இருந்த பொருள்களை எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.