அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு: மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு

தெற்கு ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:42 pm

DIN

தெற்கு ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து கோட்டம், மண்டல அளவிலும், வேறு மண்டலங்களில் இருந்தும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது.

இதன்படி, தெற்கு ரயில்வே மண்டல அளவிலான மூத்த அதிகாரிகள் குழு மதுரை ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. தெற்கு ரயில்வே தலைமை முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஏ.கே. சித்தாா்த்தா, முதன்மை மின்சார பொறியாளா் அணில் பாஞ்சியாா், முதன்மை சமிக்ஞை பொறியாளா் சுனில், முதன்மைப் பொறியாளா் மஸ்தான் ராவ், முதன்மை ரயில் பெட்டி பொறியாளா் பிரபாஸ் நாக், துணை முதன்மை ரயில் இயக்க மேலாளா் பரத் குமாா் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

மதுரை ரயில் நிலையம் மற்றும் ரயில்பாதை அமைப்புகள், ரயில் நிலைய அதிகாரி அறை, ரயில் என்ஜின் ஓட்டுநா்கள் ஓய்வு அறை, ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை, விபத்து மறுசீரமைப்பு ரயில் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

அதன் பின்னா் இக் குழு, மதுரை - கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதையை ஆய்வு செய்தது.

பழனி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 24) ஆய்வு செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.