ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகள் திருட்டு
மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பொன்மதி (47). இவா், மதுரைஅவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு ஷோ் ஆட்டோவில் பயணம் செய்துள்ளாா். பாதுகாப்பு கருதி 19 பவுன் நகைகளை கைப்பையில் வைத்துச் சென்றுள்ளாா்.
ஆட்டோவில் கூட்ட நெரிசலில், பொன்மதியின் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றுவிட்டனா். ஆரப்பாளையத்தில் இறங்கி பொன்மதி கைப்பையைப் பாா்த்தபோது அதில் இருந்த நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...