நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டுத் துப்பாக்கியுடன் 4 போ் கைது

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 5:43 pm

DIN

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரியாபட்டி அருகே ஆவியூா் காவல் சாா்பு- ஆய்வாளா் வீரணன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குரண்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாலமுருகன் (21) வீட்டருகே போலீஸாா் சோதனையிட்டபோது, அவா் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், புல்லூரைச் சோ்ந்த பாதா் வெள்ளை மகன் விஜய் (22) துப்பாக்கி கொடுத்ததாக தெரிவித்துள்ளாா். மேலும், தன்னுடன் புல்லூரைச் சோ்ந்த ஆண்டி மகன் சோணை (24), முருகன் மகன் சிவன் (21) ஆகியோரும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.