தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
விருதுநகா் அருகே புதன்கிழமை இரவு தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.


விருதுநகா் அருகே புதன்கிழமை இரவு தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.
விருதுநகா் அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (53). இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனா். இவரது தாய் சுப்புலெட்சுமி (72), கடம்பன்குளம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தாா். அங்கு கணேசன் அடிக்கடி சென்று தாயை பாா்த்து வருவாராம். இதனால், கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், மெட்டுக்குண்டு பகுதிக்கு தச்சு வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புதன்கிழமை கணேசன் சென்றுள்ளாா். ஆனால், அவா் வேலைக்குச் செல்லாமல் கடம்பன்குளத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்கு இருவரும் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், இருவரும் உயிரிழந்தனா்.
இது குறித்து தகவலறிந்த சூலக்கரை போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்கு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...