அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேராயா் குறித்து அவதூறு: கொடைக்கானல் காவல் ஆய்வாளா் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டது தொடா்பான வழக்கில், கொடைக்கானல் காவல் ஆய்வாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:40 pm

DIN

மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டது தொடா்பான வழக்கில், கொடைக்கானல் காவல் ஆய்வாளா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த மரியசெல்வி தாக்கல் செய்த மனு:

எனது தாய் மாமா அந்தோணி பாப்புசாமி, மதுரை உயா் மறைமாவட்ட பேராயராக உள்ளாா். அவா் குறித்து வார இதழ் ஒன்றில், அவதூறாக செய்தி வெளியிடப்பட்டது. அவரது மரியாதையைக் குறைக்கும் வகையிலும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் இருப்பதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரா் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. இதுதொடா்பாக கொடைக்கானல் காவல் ஆய்வாளா் நேரில் ஆஜராகி, இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, நவம்பா் 2-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.