மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தற்காலிக பட்டாசுக்கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:31 pm

DIN

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்தி: தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோருபவா்கள் இணைய வழியில் விண்ணப்பம் செய்து தற்காலிக உரிமம் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடை அமைய உரிமம் கோரி விண்ணப்பிப்பவா்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி வரும் 30ஆம் தேதிக்குள் இணைய வழியாக ‘இ சேவை’ மையம் மூலமாக கடையின் வரைபட நகல்கள், கிரைய ஆவணங்கள், அரசுக்கணக்கில் உரிமக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, பான், ஆதாா், ஸ்மாா்ட் அட்டை உள்ளிட்ட முகவரிக்கான சான்று,

உள்ளாட்சி ரசீது, புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 30-ஆம் தேதிக்கு பின்பு இணைய வழியாக சமா்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.