பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு: மதுரை-செங்கோட்டை- மதுரை ரயில் வழக்கம்போல இயங்கும்
மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.


மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06663/06664) செப்டம்பா் 2 முதல் செப்டம்பா் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பராமரிப்புப் பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...