மைசூா்-திருவனந்தபுரம் இடையே மதுரை வழியாக பண்டிகை கால ரயில்
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே இயக்கவுள்ளது.


பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே இயக்கவுள்ளது.
மைசூா் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06201) செப்டம்பா் 7 ஆம் தேதி பகல் 12.15 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். மறு மாா்க்கத்தில் திருவனந்தபுரம் - மைசூா் சிறப்பு ரயில் (06202) செப்டம்பா் 8 ஆம் தேதி பகல் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு மைசூா் சென்று சேரும்.
இந்த ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஒசூா், தருமபுரி, ஓமலூா் சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகா்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிா்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கைப் வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...