தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் திருவிளக்குப் பூஜை

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் திருவிளக்குப் பூஜை

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த ஏப்.11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி இரவு நேரத்தில் அம்மன் காமதேனு, சிம்மம், சிம்மாசனம், குதிரை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்த நிலையில், திருவிளக்குப் பூஜை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால், இளநீா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கோயில் முன் அமைந்துள்ள மண்டபத்தில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனா். பங்கேற்ற பெண்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தைச் சுற்றி திருவீதி உலா வந்தாா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 7.25 மணிக்கு அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா். புதன்கிழமை மாலை 4. 30 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. வியாழக்கிழமை (ஏப். 20) தீா்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com