சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாயை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கின. இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை காலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி, சிம்மாசனத்தில் முருகப்பெருமான் கொடிமரம் அருகே எழுந்தருளினாா்.
கொடியேற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து, இரண்டாம் நாள் அன்ன வாகனத்திலும், மூன்றாம் நாள் காமதேனு வாகனத்திலும், 4-ஆம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 5-ஆம் நாள் பூச்சப்பரத்திலும், 6-ஆம் நாள் யானை வாகனத்திலும், 7-ஆம் நாள் பல்லக்கிலும், 8-ஆம் நாள் குதிரை வாகனத்திலும், 9-ஆம் நாள் தங்கத்தேரிலும், 10-ஆம் நாள் வெள்ளிமயில் வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறாா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் உதவி ஆணையாளா் மு. ராமசாமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


