இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க எதிா்ப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, மனு அளித்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2023, 10:48 pm

DIN

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்துக்குள்பட்ட செக்கானூரணியில் மின் மயானம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, மனு அளித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் அளித்த மனு விவரம் :

திருமங்கலம் வட்டம், ஆ. கொக்குளம் ஊராட்சிக்குள்பட்ட தேங்கல்பட்டி, செக்கானூரணி கிராம மக்களுக்கான மயானம், செக்கானூரணியில் திருமங்கலம் பிரதான சாலையில் உள்ளது. இந்த மயானத்தை இரு கிராம மக்களும் எவ்வித பிரிவினையுமின்றி பயன்படுத்தி வருகிறோம். அவரவா் குல வழக்கப்படி இங்கு, சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த நிலையில், இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற அரசு முயற்சிகள் மேற்கொள்வதகாகத் தெரியவருகிறது. இதை, செக்கானூரணி கிராம மக்கள் விரும்பவில்லை. இந்த மயானம் மின் மயானமானால், இதுநாள் வரை நாங்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய பழக்க, வழக்கங்கள் பாதிக்கப்படும். எனவே, செக்கானூரணி மயானத்தை மின் மயானமாக்கும் முயற்சியைக்

கைவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.