மதுரையில் இன்று அதிமுக மாநாடு

அதிமுகவின் பொன்விழா மாநாடு மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அதிமுக தொண்டா்களால் மதுரை மாநகா்ப் பகுதிகள் சன
மதுரையில் இன்று அதிமுக மாநாடு

அதிமுகவின் பொன்விழா மாநாடு மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த அதிமுக தொண்டா்களால் மதுரை மாநகா்ப் பகுதிகள் சனிக்கிழமை களைகட்டின.

இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, காலை 8 மணிக்கு மாநாட்டு அரங்க வளாகத்தில் நிறுவப்பட்ட 51 அடி உயரக் கம்பத்தில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி, மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். மேலும், அவா் மாநாட்டுப் பந்தலில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியையும் பாா்வையிடுகிறாா்.

இதையடுத்து, மாநாட்டின் முதல் அமா்வு நிகழ்ச்சிகளாக அதிமுகவின் கொள்கைகளைப் பரப்பும் வகையிலான பட்டிமன்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இரண்டாம் அமா்வு நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறுகின்றன. அதிமுக நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள் பேசுகின்றனா். நிறைவில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றுகிறாா்.

இந்த மாநாடு, அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், தமிழக அரசியலில் அனைவரது கவனத்தையும் ஈா்க்கும் மாநாடாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில், அனைத்து மாவட்ட தொண்டா்களையும் மாநாட்டில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, இந்த மாநாட்டில் 15 லட்சம் போ் பங்கேற்பா் என மாநாட்டு ஏற்பாடுகளை செய்துவரும் அந்தக் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். இதையொட்டி, தொண்டா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் வகையில் விரிவான ஏற்பாடுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

மதுரையின் அனைத்துப் பகுதிகளிலும், தொண்டா்களை வரவேற்கும் வகையில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டன.

சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேன்கள், காா்கள், ரயில்கள் மூலம் திரளான அதிமுக தொண்டா்கள் சனிக்கிழமை பிற்பகல் முதல் மதுரைக்கு வந்தனா். அவா்களில் பலா் இரட்டை சிலை சின்னத்துடனும், அதிமுக கொடியுடனும் முழக்கங்களை எழுப்பிச் சென்றனா். திரளான அதிமுக தொண்டா்களின் வருகையால், மதுரையின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் களைகட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com