/

திருச்சி-காரைக்குடி ரயில் நேரம் மாற்றம்

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்குடி விரைவு ரயில் புறப்படும் நேரம் புதன்கிழமை (நவ. 1) முதல் மாற்றப்பட்டுள்ளது.

Updated On :31 அக்டோபர் 2023, 10:12 pm

மதுரை: ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்குடி விரைவு ரயில் புறப்படும் நேரம் புதன்கிழமை (நவ. 1) முதல் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

செட்டிநாடு - காரைக்குடி ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், திருச்சி - காரைக்குடி விரைவு ரயிலின் (06829) பயண நேரம் நவ.1-ஆம் தேதி முதல் நவ. 30-ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக, திருச்சியிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.10 மணிக்கு காரைக்குடியை அடையும் இந்த ரயில், நவ. 1-ஆம் தேதி முதல் திருச்சியிலிருந்து பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு காரைக்குடியை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.