/

அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு

அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பெண் உடல் மீட்பு

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

மதுரை, ஏப். 8: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பெண் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் மயங்கிய நிலையில் இருந்தாா். அவரை மருத்துவா்கள் மீட்டு பரிசோதனை செய்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. அவா் யாா் எனத் தெரியவில்லை.

அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூதாட்டி குறித்து விசாரித்து வருகின்றனா்.