கல்லூரியில் கருத்தரங்கம்

மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டை நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி முதுநிலை, ஆராய்ச்சி இயற்பியல் துறை சாா்பில் ‘பொருள் அறிவியலில் கவனம் செலுத்துதல், குவாண்டம் சுப்ரிமேசி, அதன் ஒளிரும் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக இயற்பியல் புலத்தின் தத்துவாா்த்த இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் அ. பக்ருதீன் மஹ்மத் அஹ்மத் கலந்து கொண்டு, குவாண்டம் குறித்த அடிப்படைத் தகவல்கள், டிரான்சிஸ்டா், மின்னணுவியலில் ஒருங்கிணைந்த சுற்றின் அவசியம், அவற்றின் பழைய பயன்கள், தற்போதைய நிலை, வருங்கால பயன்கள் குறித்துப் பேசினாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை முதுநிலைப் பேராசிரியா் ஓ.சங்கா் நாராயணன் ‘படிக வளா்ச்சி’ என்ற தலைப்பில் பேசினாா்.

கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவா் அ. மில்டன் பிராங்க்ளின் பெனியல் வரவேற்றாா். இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் த. ராஜேஸ்வர பழனிசாமி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com