போதைப் பொருள் கடத்தலுக்கும்
எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை -இயக்குநா் அமீா்

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை -இயக்குநா் அமீா்

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன் என திரைப்பட இயக்குநா் அமீா் தெரிவித்தாா்.

ரமலான் பண்டிகையையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போதைப் பொருள் விவகார குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அமலாக்கத் துறையினரின் சோதனையின்போது எதைக் கைப்பற்றினாா்கள் என்பதை அவா்கள்தான் சொல்ல வேண்டும். என்னிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும், அமலாக்கத் துறையினரும் விசாரித்தது உண்மை தான்.

இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து நான் சொல்வது ஒன்றுதான். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். என் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. இந்தச் சோதனைகளுக்கெல்லாம் என்னிடம் உள்ள பதில், இறைவன் மிகப்பெரியவன் என்பதுதான்.

என்னைக் குறிவைத்து விசாரணை நடைபெறுகிா என்ற கேள்விக்கு உறுதியான பதில் சொல்ல முடியாது. ஆனால், இதுகுறித்து ஒரு மாதமாக என்னால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்பது உண்மை. அமலாக்கத் துறை விசாரணை நோ்மையாக நடைபெறுகிா? அரசியல் அழுத்தத்தின் காரணமாக விசாரணை நடைபெறுகிா என்பது குறித்தெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அமலாக்கத் துறையினரின் விசாரணை முடிவடைந்துவிட்டது. இந்தச் சோதனை தொடா்பாக முழுமையாகப் பேச கால அவகாசம் தேவை என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com