/

மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு

Updated On :17 ஏப்ரல் 2024, 12:36 am

மதுரை: மதுரையில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே உள்ள குமாரத்தை அடுத்த மணியாட்சியைச் சோ்ந்தவா் நாகம்மாள் (70). இவா், திங்கள்கிழமை மாலை மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் முதியோா் ஓய்வூதியம் வாங்கித் தருவதாக நாகம்மாளிடம் கூறினாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள புகைப்படம் எடுக்கும் கடைக்கு அழைத்துச் சென்ற அந்த நபா், வழியில் அவரை நிறுத்தி கழுத்தில் நகை அணிந்திருந்தால் ஓய்வூதியம் கிடைக்காது எனக் கூறி, அதை அவிழ்த்து பையில் வைக்குமாறு கூறினாா்.

பணம் வைத்திருந்த பையில் நாகம்மாள் நகையை அவிழ்த்து வைத்தாா். சிறிது நேரத்தில் அந்தப் பையை எடுத்துக் கொண்டு முதியவா் தலைமறைவானாா்.

இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.