சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1,200 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1,200 டன் குப்பைகள் அகற்றம்

News image

மதுரை சித்திரை திருவிழாவில் முடிந்த நிலையில் செல்லூா் பகுதியில் பக்தா்கள் போட்டு சென்ற குப்பைகளை எடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2024, 7:52 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமான 1,200 டன் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா்.

இந்தத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம் 1, 2, 3, 4 ஆகிய 4 மண்டலங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 40 மருத்துவ அலுவலா்கள், 184 செவிலியா்கள், 27 மருந்தாளுநா்கள், 31 ஆய்வக நுட்புனா்கள் என மொத்தம் 282 போ் பணியாற்றினா். மேலும், பல்வேறு பகுதிகளில் 16 நிரந்தர கழிப்பறைகள், 8 தற்காலிக கழிப்பறைகள் என 24 கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. 112 இடங்களில் தற்காலிக குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பொது இடங்கள், அன்னதானக் கூடங்கள் ஆகிய பகுதிகளில் சேரும் திடக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சுழற்சி முறையில் 2874 பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

மேலும், 92 தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், 14 சுகாதார ஆய்வாளா்கள், 5 சுகாதார அலுவலா்கள், 2 நகா் நல அலுவலா்கள் தூய்மைப் பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் 97 இலகுரக வாகனங்கள், 20 டிராக்டா்கள், 3 டிப்பா் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி முழுவதும் ஏப். 12 ஆம் தேதி முதல் ஏப். 23 ஆம் தேதி வரை 1,200 டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டன என மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.