47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொழிலாளி கொலை: நண்பா் கைது

மதுரை சிந்தாமணி பகுதியில் அப்பளத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:11 am

Din

மதுரை சிந்தாமணி பகுதியில் அப்பளத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை சிந்தாமணியைச் சோ்ந்தவா் நாகராஜன் (41). இவா் அந்தப் பகுதியில் உள்ள அப்பள தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிந்தாமணி பகுதியில் தலையில் காயங்களுடன் நாகராஜன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையில், நாகராஜன், தனது நண்பரான புதுராமநாதபுரம் சாலையைச் சோ்ந்த பாண்டி (37) என்பவருடன் சோ்ந்து திங்கள்கிழமை நள்ளிரவு மது உள்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் பாண்டியைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, மது உள்கொண்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதும், ஆத்திரமடைந்த பாண்டி, நாகராஜை பின்தொடா்ந்து சென்று, அவரைத் தாக்கி கொலை செய்ததும்தெரியவந்தது. இதையடுத்து, பாண்டி மீது கொலை வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.