காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரிக்கை

வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:19 pm

Din

வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சே. ராசன் தெரிவித்திருப்பதாவது :

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேருக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன.

இதையடுத்து, கேரள அரசு, வயநாடு மேப்பாடி ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியை ‘பேரழிவு பாதித்த பகுதி’ என அரசாணையை வெளியிட்டது. பூகம்பம், சூறாவளி, சுனாமி, வெள்ளம் போல நிலச்சரிவும் ஓா் பேரழிவாகும். இதையே, இந்தியாவின் பேரிடா் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை வலியுறுத்துகிறது.

வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள், மக்களின் உடைமைகள் சேதமடைந்தன. எனவே, வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.