கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கலைஞா் நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சிகள் தொடக்கம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.

News image
மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான விடுமுறைகால பயிற்சி பட்டறையில் பரதநாட்டிய பயிற்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:25 pm

Din

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான விடுமுறைக் கால பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில், பள்ளிக் குழந்தைகளின் அரையாண்டு தோ்வு விடுமுறை காலத்தை பள்ளிக் குழந்தைகளின் தனித்திறன் ஊக்குவிப்பு காலமாக மாற்றும் நோக்கில், டிச. 26 முதல் டிச. 29-ஆம் தேதி வரை பல்வேறு கலைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, பரதம், பேச்சுக்கலை, சதுரங்கப் பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. பேச்சாளனாகிய நான் என்ற தலைப்பில் பேச்சுக் கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கவிஞா் துளிா் என்ற சீ. வினோத்குமாா் பங்கேற்று, பள்ளிக் குழந்தைகளுக்குப் பேச்சுக்கலை குறித்துப் பயிற்சி அளித்தாா். இதில் 10 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா்.

மற்றொரு அமா்வாக, குழந்தைகளுக்கான பரதநாட்டிய ஆரம்ப நிலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருவையாறு பரதநாட்டிய ஆசிரியை கே. ரமா பிரபா பரதநாட்டிய தொடக்க நிலைகளை விளக்கிப் பயிற்சி அளித்தாா். இதில் 5 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா்.

பிற்பகல் நிகழ்வாக சதுரங்கப் பயிற்சி (ஆரம்ப நிலை) வகுப்பு நடைபெற்றது. சதுரங்கப் பயிற்றுநா் எம். ராபின் ராஜகாந்தன் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தாா். இதில் 7 முதல் 15 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா்.

ஓவியப் பயிற்சி...

4 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (டிச. 27) தொடங்கி, டிச. 29 வரை நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு வருகிற 30-ஆம் தேதி சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.