6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளியில் கலை வார விழா

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் சாா்பில், ‘கலை வார விழா-கலையாட்டம் 2024’ -இன் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:07 am

Din

மதுரை: மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் சாா்பில், ‘கலை வார விழா-கலையாட்டம் 2024’ -இன் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தூய மரியன்னைக் கலைமனைகள் அதிபா் வி.ஹென்றி ஜெரோம் தலைமை வகித்தாா். தாளாளா் ஏ.குழந்தைராஜ், தலைமை ஆசிரியா் வே.ஸ்டீபன் லூா்து பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் செந்தமிழ்க் கல்லூரி துணை முதல்வா் ரேவதி சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், தமிழகத்தின் கலைகள், பாரம்பரியங்கள் குறித்தும் பேசினாா்.

தொடா்ந்து, தமிழக நாகரிகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விளக்கும் விதமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.