6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்: இந்து மக்கள் கட்சி புகாா்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிக உயரத்துக்கு கட்டடம் கட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:02 am

Din

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிக உயரத்துக்கு கட்டடம் கட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியது.

இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மதுரை மாவட்டச் செயலா் சோலை எம்.கண்ணன் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பாதுகாப்பு கருதி ஒரு கி.மீ.தொலைவு வரை 30 அடி உயரத்துக்குள் மட்டுமே கட்டடம் கட்ட வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால், இந்த விதிமுறையை மீறி அதிக உயரத்துக்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் எங்களது கட்சி சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேற்குச் சித்திரை வீதி வளையல்கார சந்து அருகே இரு கட்டடங்களும், மேற்கு கோபுரம் எதிரே விடுதிக் கட்டடமும் விதியை மீறி அதிக உயரத்துக்கு கட்டப்பட்டு வருகின்றன. இது அரசாணை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, இந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.