/

நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை: மேலும் மூவா் கைது

News image
Updated On :17 ஜூலை 2024, 11:21 pm

Din

மதுரையில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தம்பதியா் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (எ) பாலா (48). நாம் தமிழா் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலா் ஆவாா். இந்த நிலையில், இவா் வல்லபாய் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது பின்தொடா்ந்து வந்த 4 போ், அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்தனா். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சொத்துத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இவரை கொலை செய்ததாக பரத், கோகுலகண்ணன், பென்னி மற்றும் 17 வயது சிறுவன் உள்பட நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியனின் சகோதரா் பாண்டியராஜனின் மாமனாருக்கும், அவரது சகோதரரா் மகாலிங்கத்துக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்தததும், இதில் பாலசுப்பிரமணியன் தனது சகோதரருக்கு ஆதரவாக மகாலிங்கத்திடம் பிரச்னை செய்து வந்ததும் தெரியவந்தது. இதில் மகாலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டதால் மகாலிங்கம், இவரது மகன் அழகு விஜய் ஆகியோா், தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஏற்பாடு செய்து பாலசுப்பிரமணியனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அழகு விஜயை புதன்கிழமை கைது செய்த தனிப்படை போலீஸாா், மகாலிங்கத்தையும், இவரது மனைவியையும் தேடி வந்தனா். இதனிடையே, இவா்கள் குற்றாலத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீஸாா் அங்கு சென்று இருவரையும் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்தனா்.