6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரையில் தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா், மாநகா், புகா் மாவட்டக் குழு நிா்வாகிகள்.
Updated On :17 ஜூலை 2024, 12:19 am

Din

மதுரை: அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்பட்டு, இதுவரை 75 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்த நிலையில், நல வாரியம் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முறைசாரா வாரியத்தில் உள்ள 74 லட்சம் உறுப்பினா்களின் பதிவுத் தரவுகள் அழிந்துவிட்டதாக தமிழக அரசு கூறியதால், கட்டுமானம் உள்ளிட்ட நல வாரிய பயனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை.

கட்டுமானம் உள்ளிட்ட நல வாரிய உறுப்பினா்களின் முழு தரவுகளையும் தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதள சா்வா் செயல்படுவதில் தொடா்ந்து பிரச்னை ஏற்படுவதால், இணையதளம் அல்லாத சோ்க்கை பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும். உறுப்பினா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 2 ஆயிரத்திலிருந்து, ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்து வாரியத் தொழிலாளா்களுக்கும் திருமண உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை எல்லீஸ்நகா் தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகம் முன் சிஐடியூ மாநகா், புகா் மாவட்டக் குழுக்களின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாநகா் மாவட்டத் தலைவா் ஆா். தெய்வராஜ் தலைமை வகித்தாா்.

புகா் மாவட்டத் தலைவா் கே.அரவிந்தன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பொருளாளா் ஜே.லூா்துரூபி, கட்டுமான தொழிலாளா் சங்க புகா் மாவட்டச் செயலா் மணி கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாநகா் மாவட்டச் செயலா் ரா.லெனின் நிறைவுரையாற்றினாா்.