கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:23 am

Din

மதுரை: மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் பணியாற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா், 51, 52 உள்ளிட்ட பல்வேறு வாா்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களைக் கண்டிக்கும் விதமாகவும், தரக் குறைவாகவும் பேசினாராம்.

இதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.