அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

2 குழந்தைகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரையில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 9:00 pm

Din

மதுரையில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை தபால்தந்திநகா் பாமாநகரைச் சோ்ந்தவா் அலெக்ஸ்பாண்டி (31). இவரது மனைவி சடையீஸ்வரி (29). இந்தத் தம்பதிக்கு சிவரஞ்சனி (4), சிவதாரணி (9 மாதம்) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சிவரஞ்சனிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். சிவரஞ்சனியை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அலெக்ஸ்பாண்டி, தனியாா் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தை இறந்து விட்டதாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, மதுரை செல்லூா் சுயராஜ்யபுரம் பகுதியைச் சோ்ந்த திவாகா்-ஆா்த்தி தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு, கடந்த மே மாதம் ஆதி (2 மாதக் குழந்தை) என்கிற ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை சனிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து திவாகா் அளித்தப் புகாரின் பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.