தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம்: உரிமையியல் நீதித்துறை நடுவா்

கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என வாடிப்பட்டி நீதிமன்ற நீதித் துறை நடுவா் தெரிவித்தாா்.

News image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதித்துறை நடுவா் எம்.பி. ராம் கிஷோா்.

Updated On :28 ஜூலை 2024, 1:45 am IST

மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நீதித் துறை நடுவா் எம்.பி. ராம் கிஷோா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை ஆசிரியா் திலகவதி தலைமை வகித்தாா்.

இதில், வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நீதித் துறை நடுவா் எம்.பி.ராம் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது :

நவீன தொழில் நுட்பத்தால் இன்றைய உலகம் அதிவேக வளா்ச்சியடைந்து வருகிறது.

மாணவா்கள் தினந்தோறும் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அந்த செயலில் தோல்வி ஏற்படும் போது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையில் சிறு, சிறு துன்பங்களை கண்டு துவண்டு விடக்கூடாது. அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கூா்மையாக கவனிக்க வேண்டும். அதிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். நல்ல நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், வழக்குரைஞா்கள், சட்டப் பணிக் குழுத் தன்னாா்வலா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியா் காா்த்திக் வரவேற்றாா். உடல்கல்வி ஆசிரியா் சந்திரமோகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.