மதுரையில் 320 குடியிருப்புகள் 
பயனாளிகளிடம் ஒப்படைப்பு

மதுரையில் 320 குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு

மதுரை மஞ்சள்மேடு பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், கட்டப்பட்ட 320 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம், புதிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, பயனாளிகளுக்குக் குடியிருப்புக்கான ஆணைகளை வழங்கினாா். திட்டப் பகுதியில் ஏற்கெனவே வசித்த பயனாளிகளுக்கும், வாழ்விடம் இல்லாத 20 பேருக்கும் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆணைகள் வழங்கப்பட்டன. மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். சுடலை முத்துக்குமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் ஈஸ்வரி, வீட்டுவசதி வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் கே.ஏ. பெரியசாமி, செயற்பொறியாளா் ஆா். ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com