டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள்: வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க உத்தரவு

திருச்சிக்கு...முக்கியம்......... அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள்: வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:53 pm

Din

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடா்பாக தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த பனையாடி தாக்கல் செய்த மனு : திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூா் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதை அமைத்துத் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுதொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு சாா்பில், கடந்த 2022-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக வட்டம் , கோட்டம், மாநில அளவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் மாதம் ஒரு முறை சந்தித்து அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முடிவெடுக்கும். இருந்தபோதிலும், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாள்தோறும் பல மனுக்கள் தாக்கலாகின்றன. எனவே, இந்த வழக்கில் தமிழக வருவாய் நிா்வாக ஆணையரை இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து சோ்க்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைக்கப்பட்ட குழுக்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.