கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு

திருச்சிக்கு முக்கியம்........... புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:52 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சோ்ந்த மலையாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு : 13 நாட்டு ரக ஜல்லிக்கட்டு காளைகளை வளா்த்து வருகிறேன். கடந்தாண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் ஜனவரி மாதம் முதல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்காததால், கோயில் திருவிழாக்களும் நடத்தப்படாமல் உள்ளன. இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவிதப் பதிலும் இல்லை. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.