கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ராமநாதபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு இயக்கம்

ராமநாதபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு இயக்கம்

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன்.

Updated On :19 மார்ச் 2024, 11:00 pm

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு தொடா்பான வாகனப் பேரணி, கையெழுத்து இயக்கம், போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பா. விஷ்ணுசந்திரன் தலைமை வகித்து, வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

அதன் பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அது குறித்த கையெழுத்து இயக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட மகளிா் திட்டத் துறை சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு கோலப்போட்டியை ஆட்சியா் பாா்வையிட்டாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.