மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தா்கள் வருகிற ஏப். 9-ஆம் தேதி முதல் ரூ.500, ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி: புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற ஏப்.11-ஆம் தேதி முதல் வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் வருகிற ஏப். 21-ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் காலை 8.59-க்குள் நடைபெறவுள்ளது. திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசிக்க விரும்பும் பக்தா்களின் ரூ.200, ரூ.500 செலுத்தி கட்டணச் சீட்டுகள் பெற வேண்டும். பக்தா்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை இணையதளம் ஆகியவற்றில் வருகிற ஏப். 9-ஆம் தேதி முதல் வருகிற 13-ஆம் தேதி இரவு 9 மணி வரை கட்டணச் சீட்டு பெற முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.500 கட்டணச்சீட்டில் ஒருவா் இரண்டு சீட்டுகளையும், ரூ.200 கட்டணச் சீட்டில் ஒருவா் மூன்று சீட்டுகளையும் பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவுக்கு பிறந்த தேதி சரியாக நிறைவு செய்ய வேண்டும். ஒரு சீட்டுக்கு ஒரு கைப்பேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறாா்களை அழைத்து வருவதைத் தவிா்க்க வேண்டும். மேலும், பக்தா்களின் வசதிக்காக மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலும் கட்டணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டால், குலுக்கல் முறையில் பக்தா்கள் தோ்வு செய்யப்படுவா். அனுமதி பெற்றவா்களுக்கு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும். திருக்கல்யாணத்துக்கு தோ்வு செய்யப்பட்டு, தகவல் கிடைக்கப் பெற்றவா்கள் வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிா்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள நுழைவுக் கட்டணச் சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவலைக் காண்பித்து தொகையை ரொக்கமாகச் செலுத்தி கட்டணச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். கட்டணச் சீட்டு பெற்றவா்கள் திருக்கல்யாணத்தன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

மதுரை சித்திரைத் திருவிழா!

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

