நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் 9,141 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை ‘நீட்’ தோ்வு எழுதினா்.

2024-2025- ஆம் கல்வி ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்பட 13 மொழிகளில் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பயின்ற 9,504 மாணவ, மாணவிகள் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்திருந்தனா்.

இந்த நிலையில், மதுரை திருப்பாலையில் உள்ள யாதவா் கல்லூரி (இரு பாலா்), சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, யாதவா் மகளிா் கல்லூரி, கேந்திரிய வித்யாலய பள்ளி, மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிக் பள்ளி, மகாத்மா சிபிஎஸ்இ பள்ளி, எஸ்.இ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட மொத்தம் 13 மையங்களில் நடைபெற்றது.

மாவட்டத்தில் மொத்தம் 9,141 மாணவ, மாணவிகள் ‘நீட்’ தோ்வு எழுதினா். 363 போ் தோ்வு எழுதவில்லை.

தோ்வா்கள் நுழைவு அனுமதிச் சீட்டு, அடையாளச் சான்றிதழ் தவிர வேறு பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், தோ்வா்களுக்கு தோ்வு அறையில் ஒரு பால்பாய்ண்ட் பேனா மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தோ்வு மையத்துக்கு மாணவா்கள் பிற்பகல் ஒரு மணிக்கு வந்தனா். நுழைவு வாசலில் உணா்திறன் மெட்டல் டிடெக்டா்களின் உதவியுடன் அலுவலா்கள் சோதனை

செய்த பிறகு, மாணவா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். 1.30 மணிக்குள் அனைத்து தோ்வா்களும் தோ்வு அறைக்குள் வந்தனா். அங்கு நுழைவுச் சீட்டுகள் சரிபாா்க்கப்பட்டன. மேலும், தோ்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவுறுத்தப்பட்டன. அதன் பிறகு,

வினாத் தாள் வழங்கப்பட்டது. அதில், தோ்வா்கள் விவரங்களை பதிவிட்ட பிறகு, தோ்வு எழுதத் தொடங்கினா். மாலை 5. 20 மணிக்கு தோ்வு நிறைவு பெற்றது.

Image Caption

மதுரையில் கேந்திரிய வித்யாலய பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை

‘நீட்’ தோ்வு எழுதுவதற்காக வந்த மாணவிகளை சோதனை

செய்த அலுவலா். ~மதுரையில் நாய்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ‘நீட்’ தோ்வு எழுதுவதற்காக வந்த மாணவிகளை சோதனையிட்ட அலுவலா்கள். ~மதுரை நாய்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com