ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கா்நாடக எம்பியை கைது செய்யக் கோரி காங்கிரஸ் மகளிா் பிரிவினா் மனு

கா்நாடக எம்பியை கைது செய்யக் கோரி காங்கிரஸ் மகளிா் பிரிவினா் மனு

News image

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :8 மே 2024, 12:44 am

Din

மதுரை: பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திய கா்நாடக மாநில மக்களவை உறுப்பினா் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட மகளிா் பிரிவு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மக்களவைத் தொகுதியின் மஜத கட்சியின் மக்களவை உறுப்பினா் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா ஆகியோா் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக, அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில், பிரஜ் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளாா்.

இந்த நிலையில், பிரஜ் ரேவண்ணாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களுக்கு உளவியல் ஆதரவு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகா் மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் ஆா். ஷானவாஸ் பேகம் தலைமையிலான நிா்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

காங்கிரஸ் மகளிா் பிரிவு மாநகா் மாவட்ட பொதுச் செயலா்கள் சுஜாதா, சுமதி, உஷா, மாவட்ட துணைத் தலைவா் ராபியத், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் பாலு, வழக்குரைஞா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.