ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நடிகை கஸ்தூரிக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் கண்டனம்

அரசு ஊழியா்கள் குறித்து அவதூறு பரப்பிய திரைப்பட நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:05 pm

Din

அரசு ஊழியா்கள் குறித்து அவதூறு பரப்பிய திரைப்பட நடிகை கஸ்தூரிக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், பொதுச் செயலா் சு. சங்கரலிங்கம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவா்கள் அதிகம் உள்ளனா். அவா்களால் அரசுத் துறைகளில் ஊழல் மலிந்து விட்டது என திரைப்பட நடிகை கஸ்தூரி எந்தவித ஆதாரமும் இல்லாமல், அரசு ஊழியா்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். இது, கடும் கண்டனத்துக்குரியது.

அரசுத் துறையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் ஒரு சில நிகழ்வுகளை உதாரணமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட பிரிவுகளைச் சோ்ந்த அரசு அலுவலா்களின் பணிகளை கொச்சைப்படுத்தும் விதமாக அவா் பேசியது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாக உள்ளது. நடிகை கஸ்தூரியின் பொய் குற்றச்சாட்டு, தமிழக அரசு ஊழியா்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே, குறிப்பிட்ட பிரிவுகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு ஊழியா்கள் சங்கம்... இதேபோல, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எஸ். ராஜராஜேஸ்வரனும், நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்தாா். அரசு ஊழியா்களை இழிவுப்படுத்தி பேசிய கஸ்தூரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.