ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சோலைமலையில் இன்று சூரசம்ஹாரம்

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:05 pm

Din

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, கடந்த 2-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. அத்துடன் பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினா். இதையடுத்து, அன்னம், காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளினாா். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது.

முன்னதாக சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 3.45 மணியளவில் வேல் வாங்கும் நிகழ்வும், பிறகு வள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாலை 4 மணியளவில் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், தலவிருட்ஷம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் வதம்செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ. 8) காலை 10 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சூரசம்ஹார வைபவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.