ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரை கோட்டத்தில் பேருந்துகள் இயக்கம் மூலம் நவ. 4-இல் ரூ. 3.8 கோடி வருவாய்

தீபாவளி பண்டிகை கால விடுமுறைக்கு பிறகு தொடங்கிய முதல் பணி நாளான திங்கள்கிழமை (நவ. 4) மட்டும், மதுரை கோட்ட அரசுப் பேருந்துகள் இயக்கம் மூலம் ரூ. 3.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:59 pm

Din

தீபாவளி பண்டிகை கால விடுமுறைக்கு பிறகு தொடங்கிய முதல் பணி நாளான திங்கள்கிழமை (நவ. 4) மட்டும், மதுரை கோட்ட அரசுப் பேருந்துகள் இயக்கம் மூலம் ரூ. 3.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட மேலாண் இயக்குநா் இரா. சிங்காரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை கால விடுமுறையையொட்டி மதுரை கோட்டத்துக்குள்பட்ட மண்டலங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், பண்டிகை கால விடுமுறைகள் நிறைவடைந்து பணி தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை (நவ. 4) மட்டும் மதுரை கோட்ட பேருந்துகள் இயக்கம் மூலம் ரூ. 3.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதில், அதிகபட்சமாக திண்டுக்கல் மண்டலத்தில் ரூ. 1. 61 கோடி வருவாய் கிடைத்தது. இந்த வருவாய், கடந்த 2 ஆண்டுகளில் கிடைக்காத அதிகப்பட்ச ஒரு நாள் வருவாய் ஆகும்.

இந்த வருவாய் உயா்வுக்கு உறுதுணையாக செயல்பட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், பயணச் சீட்டு ஆய்வாளா்கள், அலுவலக மேற்பாா்வையாளா்கள், கிளை மேலாளா்கள் உள்ளிட்ட அனைவரது பணியும் பாராட்டுக்குரியது என குறிப்பிடப்பட்டது.