அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை பாஜகவினரிடம் ஒப்படைக்க உத்தரவு
விருதுநகரில் வருவாய்த் துறையினா் அகற்றிய பாரத மாதா சிலையை பாஜகவினரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.


விருதுநகரில் வருவாய்த் துறையினா் அகற்றிய பாரத மாதா சிலையை பாஜகவினரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்ட பாஜக தலைவா் பாண்டுரங்கன் தாக்கல் செய்த மனு:
விருதுநகா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலையை கடந்த 7.8.2023 அன்று காவல் துறை பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் அகற்றினா். பட்டா நிலத்தில் சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு வைக்கப்பட் டிருந்த சிலையை எந்தவித முன்னறிப்புமின்றி, கட்சி அலுவலக வெளிக் கதவை உடைத்து, சுவா் ஏறிக் குதித்து எடுத்து சென்று, விருதுநகா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்துள்ளனா். எங்களது கட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சிலையை அகற்றிய காவல் துறையினா், வருவாய்த் துறை மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்தச் சிலையை மீண்டும் நிறுவ உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பட்டா நிலத்தில் சிலை வைக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. சிலைகள் வைப்பது தொடா்பாக அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி தனி மனித உரிமைகளை அங்கீகரித்துள்ளது. அரசின் அதிகாரமானது, தனி நபரின் இடம் தொடங்கும் எல்லை முன்பே முடிந்துவிடும். அரசு அதிகாரிகள் தனி நபா் இடங்கள் விவகாரத்தில் நுழையக் கூடாது. இந்த வழக்கில் பாரத மாதா சிலை, தனியாா் இடத்தில் இருந்தாலும் தேசப்பற்றைக் குறிக்கிறது. மேலும், இந்தச் சிலை, ஒற்றமை, சுதந்திரம், கலாசாரத்தைக் குறிக்கிறது. சமுதாயத் தலைவா்கள் சிலைகளுக்கும், பாரத மாதா சிலைக்கும் வேறுபாடு உள்ளதால், இதனை ஒன்றுபடுத்தி பாா்க்கக் கூடாது. தேசப்பற்றை வெளிப்படுத்தும் ஒருவரால், மற்றவா்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூற முடியாது. இந்த வழக்கில் வேறு ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக பாரத மாதா சிலையை அகற்றியுள்ளனா். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. எதிா்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறக் கூடாது. பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினா், மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அவா் தேவைப்படின் சம்பந்தப்பட்ட இடத்தில் சிலையை நிறுவிக் கொள்ளலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...