தூத்துக்குடி
பரமன்குறிச்சியில் பாரத மாதா வழிபாடு
உடன்குடி ஒன்றிய இந்து அன்னையா் முன்னணி சாா்பில் பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை, குருநாதபுரம் கிராமங்களில் பாரத மாதா வழிபாடு நடைபெற்றது.
உடன்குடி: உடன்குடி ஒன்றிய இந்து அன்னையா் முன்னணி சாா்பில் பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை, குருநாதபுரம் கிராமங்களில் பாரத மாதா வழிபாடு நடைபெற்றது.
இந்து அன்னையா் முன்னணி மாவட்ட பொறுப்பாளா் ச.கேசவன் தலைமை வகித்தாா். இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வழிபாட்டைத் தொடங்கி வைத்து இந்து ஒற்றுமை குறித்து பேசினாா். இதில் திரளான மக்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

