அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சாலை விபத்துகளில் இருவா் பலி!

மதுரை ஊரகப் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் பலியானது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:18 pm

Din

மதுரை ஊரகப் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் பலியானது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த பாலகுரு மகன் சண்முகராஜா (23). இவா் தனது நண்பரான ராமேசுவரம் வோ்க்கோடு ராஜகோபால்நகரைச் சோ்ந்த பிரபாகரனுடன் இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். மதுரை- சிவகங்கை சாலையில் நாட்டாா்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் செல்லும் வழியிலேயே சண்முகராஜா உயிரிழந்தாா். பிரபாகரன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து தொடா்பாக சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு விபத்து: மதுரை மாவட்டம், கெத்துவாா்பட்டி பொட்டல்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் பரமசிவம் (44). இவா் ராஜாபாளையம்- மதுரை சாலையில் விபிஆா் ஆலை அருகே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து தே. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.