ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சிதிலமடைந்த கட்டடத்தில் நூலகம்: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தில் சிதிலமடைந்த கட்டடத்தில் நூலகம் செயல்படுவது தொடா்பான வழக்கில் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:52 pm

Din

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தில் சிதிலமடைந்த கட்டடத்தில் நூலகம் செயல்படுவது தொடா்பான வழக்கில் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சாலைக்கிராமத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

சாலைக்கிராமத்தில் அரசு நீா்நிலை புறம்போக்கில் உள்ள இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுக் கட்டடத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டிருப்பதால் சாலைக்கிராமம் மட்டுமன்றி அருகே உள்ள 10- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் படிப்பதற்காக இங்கு வந்து செல்கின்றனா். பல ஆண்டுகள் கடந்துவிட்டதால், இந்த நூலகக் கட்டடம் சிதிலமடைந்து விட்டது. இதனால் இந்த நூலகத்துக்கு வருவோருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, மாற்று இடம் ஒதுக்கி அங்கு புதிய நூலகம் கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரியா கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒதுக்கி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.