சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கி ஊழியா் சங்கத் தலைவா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மதுரை தல்லாகுளத்தில் உள்ள தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தினா்.
Updated On :13 நவம்பர் 2024, 10:08 pm

Din

வங்கி ஊழியா் சங்கத் தலைவா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தல்லாகுளத்தில் உள்ள தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மதுரை மாவட்ட வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலா் குமரன் தலைமை வகித்தாா். தலைவா் டேவிட் வினோத் குமாா், செயலா் காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

அப்போது, தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி ஊழியா் சங்கத்தின் தலைவா் பிரபாகா், பொதுச் செயலா் விக்னேஷ் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வங்கி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.