ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை...

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:24 pm

Din

திண்டுக்கல் பகுதியில் 72 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் முன்னாள் காவலா் உள்பட 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் பகுதியில் கடந்தாண்டு காரில் 72 கிலோ கஞ்சா கடத்தியதாக முன்னாள் காவலா் அருண்குமாா் (48), சுரேஷ் (41), யோகராஜ் (24), அஜித்குமாா் (26) ஆகியோரை தெற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் முடிவில், முன்னாள் காவலா் அருண்குமாா் உள்பட 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜய பாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.