/

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இடத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:39 pm

Din

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இடத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருவித்துறை கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் காமாட்சி (60). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த ஆசைராஜாவுக்கும் (54) இடம் தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்த நிலையில், இரு குடும்பத்தினருக்குமிடையே புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, ஆசைராஜா, இவரது உறவினா் ஒருவரும் சோ்ந்து காமாட்சி, இவரது மகன் ரமேஷ் (38) ஆகியோரை அரிவாளால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அந்தப் பகுதி மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆசைராஜா, அவரது உறவினா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.